அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பிற்கினிய இஸ்லாம் கல்வி இணையதள வாசகர்களுக்கு,
புனித ரமழான் மாதத்தில் நோன்பு சம்மந்தமான மக்களுக்கு ஏற்பட கூடிய நவீன பிரச்சனைகள் நோன்போடு சம்மந்தப்பட்ட சந்தேகங்களுக்கான விளக்கத்தினை எமது இணையதளத்திறக்காக சிறப்பு நிகழ்சியாக பதிவு செய்து வெளியிடப்படுகின்றது.
சவூதி அரேபியாவின் கிழக்குமாகாணத்தின் தம்மாம் நகரத்தில் உள்ள இஸ்லாமிய கலச்சார நிலையத்தின் அழைப்பாளர் மரியாதைகுரிய மவ்லவி ஹாபிழ். முஹம்மத் மன்சூர் மதனி அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள்.
இந்த முதல் தொடரில் நோன்பாளி நோன்புடன்
பற்பசையை பயன்படுத்தி பல்துலக்கலாமா?
ஊசி மற்றும் குளுக்கோஸ் போடலாமா?
பற்சிதைவு மற்றும் உதடு வெடிப்பின் காரணமாக இரத்தம் வெளியேறினால் நோன்பு பாதிக்குமா?
இரத்த காயம் அல்லது உடல் வலிக்காக வாசனையுடன் கூடிய கீரிம் உபயோகிக்கலாமா?
வாசனை திரவியங்கள் பயன் படுத்தலாமா?
கண், மூக்கு மற்றும் காது-க்கு சொட்டு மருந்து பயன்படுத்தலாமா?
மேற்கண்ட கேள்விகளுக்கு குர்ஆன், ஸுன்னா அடிப்படையில் அதிகமான விளக்கங்களை தருகின்றார் ஆசிரியர் ஹாபிழ். முஹம்மத் மன்சூர் மதனி அவர்கள்.
இதன் தொடர்ச்சி இன்ஷா அல்லாஹ் நாளை வெளியிடப்படும் …
ஓளிப்பதிவு: Islamkalvi Media Unit
படத்தொகுப்பு: தென்காசி S. A. ஸித்திக்