இஷாத் தொழுகையினது பின் சுன்னத்திலிருந்து சுபஹுடைய அதான் வரையிலான இரவு வேளையில் தொழப்படும் சுன்னத்தான தொழுகைக்கு இரவுத் தொழுகை என்று கூறப்படும். அறபியில் இதற்கு ‘கியாமுல் லைல்’ என்று கூறுவர். ரமழான் மாதத்தில் மட்டுமல்லாது ஏனைய காலங்களிலும் இந்த இரவுத் தொழுகைக்குத் தனியான சிறப்பம்சங்கள் இருக்கின்றன. ஆன்மீக முன்னேற்றத்தில் இரவுத் தொழுகையின் பங்கு முக்கியமானதாகும்.
21 டிசம்பர் 2012 அன்று பஹ்ரைனில் சவுத் பார்க் அரங்கத்தில் வைத்து நடைபெற்ற இஸ்லாம் உங்கள் மார்க்கம் நிகழ்ச்சியில் மவ்லவி இஸ்மாயீல் ஸலஃபி அவர்கள் “முஹம்மத் (ஸல்) அகிலத்தின் அருட்கொடை” என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் வீடியோ. முஹம்மத் நபியின் அழகிய பண்பையும் நபித்துவத்தின் உண்மை நிலையையும் மாற்று மத சகோதரர்களுக்கு விளக்கிக் காட்டும் அருமையான சொற்பொழிவு. முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வைப் பற்றி சுருக்கமாக அறிந்து கொள்ள விரும்பும் […]
வழங்குபவர்: மவ்லவி: S.H.M. இஸ்மாயீல் ஸலஃபி இடம்: அப்துல் ரஹ்மான் அல்ஸயானி மஸ்ஜித், குதைபிய்யா, பஹ்ரைன். நுபுவத்தின் காலகட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் செய்த அற்புதங்கள் அவர்களின் நபித்துவத்தை உண்மைப்படுத்துபவை. நமது ஈமானுக்கு எழுச்சியூட்டக்கூடியவை. அத்தகைய அற்புதங்களைப் பற்றி அழகிய முறையில் விவரிக்கும் எழுச்சியுரை. Organized by: The Islamic Center for Da’awa (Tamil Community), Kingdom of Bahrain