Author: மெளலவி S.E.H. இஸ்மாயில் ஸலஃபி
அஹ்லுஸ் ஸுன்னா யார்? (Part 1/5) – Audio/Video
போலி ஹதீஸ்களும், சமூகத்தில் அதன் தாக்கங்களும்!
குர்ஆன், ஹதீஸ் என்ற அடிப்படையான இரண்டு மூலாதாரங்களின் மீதுதான் இஸ்லாம் எனும் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. குர்ஆனைப் பொறுத்தவரையில் அது அல்லாஹ்வின் ‘கலாம்’ பேச்சு என்பதால் அதில் யாரும் எந்தக் குளறுபடிகளும் செய்துவிட முடியாது. 1400 வருடங்களாக எத்தகைய இடைச்செருகல் களுக்கோ, கூட்டல் குறைத்தல்களுக்கோ உள்ளாகாமல் அட்சரம் பிசகாமல் அப்படியே அது பாதுகாக்கப்பட்டுள்ளது.
Read More “போலி ஹதீஸ்களும், சமூகத்தில் அதன் தாக்கங்களும்!” »
தவ்பாவும் அதன் ஆன்மீக லௌஹீக பயன்களும்!
மனிதன் மலக்குகள் போன்று தவறே செய்யாதவனாக வாழ முடியாது! ஆசாபாசங்களும், உலகியல் தேவைகளும் உணர்ச்சிகளும் நிறைந்த சமூகப் பிராணியான மனிதன் தெரிந்தோ தெரியாமலோ, திட்டமிட்டோ திட்டமிடாமலோ பல்வேறு தவறுகளைச் செய்யலாம். ஆதி பிதா ஆதம்(அலை) அவர்களும், முதல் தாய் ஹவ்வா(அலை) அவர்களும் ஷைத்தானின் தூண்டுதலால் அல்லாஹ்வின் கட்டளையை மீறியமையை குர்ஆன் மூலம் நாம் அறிகின்றோம்.
பித்அதுல் ஹஸனா!
கடந்த பல இதழ்களில் பித்அத் குறித்து பல்வேறுபட்ட அம்சங்களை நாம் விளங்கி வந்தோம். கடந்த இரு இதழ்களிலும் பித்அத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்துப் பார்த்தோம். பித்அத் கூடாது என்று எவ்வளவுதான் கூறினாலும் “நல்ல பித்அத்தும் இருக்கிறதுதானே” என்ற ஒரு வசனத்தில் அவ்வளவு ஆதாரங்களையும் சில உலமாக்கள் மழுங்கடித்துவிட முயல்கின்றனர்.
பொதுமக்களும் பித்அதுல் ஹஸனா பற்றி அறியாமல் இவர்கள் உளறுகின்றனர் என எண்ணிவிடுகின்றனர். எனவே பித்அதுல் ஹஸனா (நல்ல பித்அத்) குறித்து விரிவாக விளக்குவது அவசியமாகின்றது.