தொகுப்பு: அஷ்ஷைக் முஹம்மது ஸாலிஹ் அல்முனஜ்ஜித் மேற்பார்வை: அல்லாமா அஷ்ஷைக் அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் தமிழில்: எம். முஜீபுர் ரஹ்மான் உமரீ 1) அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்: அல்லாஹ் தடுத்துள்ளவைகளில் முதன்மையானது ஷிர்க் எனும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் பெரும் பாவச் செயலாகும்.
ஐயம்: தஃலீம் கிதாப் படிக்கலாமா? – மின்னஞ்சல் வழியாக சகோதரர் அபூபக்ர் தெளிவு: ஸக்கரியா ஸாஹிப் எழுதிய சில நூல்கள், ‘ஃபளாயிலே அஃமால்’ என்ற பெயரில் தொகுக்கப் பட்டது. அத்தொகுப்புப் பல மொழிகளில் பெயர்க்கப் பட்டு, நாடு முழுவதுமுள்ள அல்லாஹ்வின் பள்ளிகளில் படிப்பில் இருக்கிறது. தமிழில் மவ்லவீ நிஜாமுத்தீன் மன்பயீ மொழிபெயர்த்த அத்தொகுப்புக்குப் பெயர் ‘அமல்களின் சிறப்புகள்’ என்பதாகும்.
நோய் நொடிகள் நீங்க, கஷ்டங்கள் தீர, நாட்டங்கள் நிறைவேற ஸலவாத்துன்னாரியா என்னும் புதிய ஸலவாத்தைக் கண்டு பிடித்து அதை 4444 ஓத வேண்டும் என்று எண்ணிக்கையையும் நிர்ணயித்திருக்கின்றனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையை நிர்ணயித்திருப்பதன் நோக்கமே, தனியொரு நபராக ஓதுவது சிரமம், பலரையும் கூப்பிட்டு ஓதச் சொல்வார்கள், கணிசமான ஒரு தொகையைக் கறந்து விடலாம் என்பது தான்.
கட்டுரை ஆசிரியர் : மஸ்தூக்கா அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடுவதாகக் கூறி. சுப்ஹான மவ்லிதை வைத்துப் பிழைப்பு நடத்துவது போதாதென்று, கூடவே ‘கஸீதத்துல் புர்தா’ என்னும் கவிதையையும் சேர்த்துக் கொண்டனர். எதுகையும் மோனையும் இலக்கிய நயமும் இருக்கிறது என்பதற்காகவும், ராகத்துடன் பாடுவதற்கேற்ற ரம்மியமான பாடல் என்பதற்காகவும், இக்கவிதையை ரசிக்கலாம் என்றால், இக் கவிதையில் நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறிப் புகழப்படுகின்றது.
கட்டுரை ஆசிரியர் : மஸ்தூக்கா ரபீவுல் அவ்வல் மாதம் வந்து விட்டால், 12 நாட்களும் பள்ளிகள் தோறும் பக்திப் பரவசத்துடன் மவ்லிது ஓதப் படுகின்றது. பணக்காரர்கள் சிலர் பரக்கத்துக்காகத் தமது வீடுகளிலும் இந்த மவ்லிதை ஓதி விருந்து படைக்கின்றனர். தமது வயிற்றுப் பிழைப்புக்காக, சில கூலிப் பட்டாளங்கள் உருவாக்கிய இப்பழக்கம், இறைவனாலோ இறைத்தூதர் (ஸல்) அவர்களாலோ, அங்கீகரிக்கப் பட்தல்ல. இந்த மவ்லிதை நிராகரிப்பதற்கு இந்த ஒரு காரணம் மட்டுமே போதும்.