அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தன்னுடைய (‘லவ்ஹுல் மஹ்ஃபூழ்’ என்னும்) பதிவேட்டில் – அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது – ‘என் கருணை என் கோபத்தை மிகைத்து விட்டது” என்று எழுதினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி : 3194 அபூஹுரைரா (ரலி).)
அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான்
Category: இஸ்லாம்
ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம்! – Audio/Video
கருணையாளனிடம் கேட்போம் கவலையை மறப்போம்!
ஐவேளைத் தொழுகையையும் அவசியம் தொழுவோம்! – Audio/Video
நாங்கள் ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் என்றும், இஸ்லாமிய அழைப்பாளர்கள் என்றும் கூறிக்கொண்டே தொழுகைகளில் அலட்சியம் காட்டும் அதிலும் குறிப்பாக பஜ்ருடைய தொழுகைக்காக பாங்கு கூறப்படும் போது முகம் குப்புறப்படுத்துத் தூங்குகின்ற சகோதரர்கள் கேட்டு தெளிவு பெற வேண்டிய அற்புதமான உரையை மவ்லவி அலி அக்பர் உமரி அவர்கள் ஆற்றியுள்ளார்கள். நாம் அனைவரும் இந்த சிறந்த உரையைக் கேட்டு அதன்படி நடக்க வல்ல இறைவன் அருள்புரிவானாகவும். ஆமீன் – நிர்வாகி.
நிகழ்ச்சி : அருள்மறை குர்ஆன் விளக்கவுரை
நாள் : 13-05-2010
இடம் : அல்கோபார் இஸ்லாமிய நிலையத்தின் சொற்பொழிவு அரங்கம், சவூதி அரேபியா.
Read More “ஐவேளைத் தொழுகையையும் அவசியம் தொழுவோம்! – Audio/Video” »
நபி (ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்!
கருணை நபி என்று சொல்லப்படும் அளவுக்கு, முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இந்த உம்மத்தினர் மீது அளப்பரிய பாசத்தை வெளிப்படுத்தக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.தன்னுடைய வாழ்நாளில், பற்பல துன்பங்களை அடைந்த போதும், நபி அவர்கள் ஒரு சில சந்தர்ப்பத்தை தவிர்த்து, பிறரை சபித்ததே இல்லை.
Read More “நபி (ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்!” »
இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே!
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: –
“மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் – நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்” (அல்குர்ஆன் 67:13)
இந்த வசனத்தில் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம் இருக்கின்றன. நாம் என்ன நினைக்கிறோம் அல்லது நமக்கு எது நமக்குத் தேவையாக இருக்கிறது என்பதை நாம் பிறருக்குச் சொன்னால் தவிர மற்றவர்களால் அறிந்து கொள்ள இயலாது. ஆனால் நம்மைப் படைத்த இறைவனான அல்லாஹ் மடடும் நாம் வெளிப்படையாக பேசுவதையும், நம் இதயங்களில் மறைத்து வைத்துள்ள இரகசியங்களையும் அறிவான். இந்தப் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மடடுமே உரியது.