வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரழி) பள்ளி வளாகம், அல்-ஜுபைல்
நாள்: 24.03.2011
வெளியீடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம்
Category: நேர்ச்சை
தடுக்கப்பட்டவை!
தொகுப்பு: அஷ்ஷைக் முஹம்மது ஸாலிஹ் அல்முனஜ்ஜித்
மேற்பார்வை: அல்லாமா அஷ்ஷைக் அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ்
தமிழில்: எம். முஜீபுர் ரஹ்மான் உமரீ
1) அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்:
அல்லாஹ் தடுத்துள்ளவைகளில் முதன்மையானது ஷிர்க் எனும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் பெரும் பாவச் செயலாகும்.
அழிந்து போகும் கந்தூரிகளும் உயிர்ப்பிக்கத் துடிக்கும் மௌலவிகளும்
அல்லாஹ்வின் மார்க்கமாகிய புனித இஸ்லாத்தைக் கற்றவர்கள்தாம் ஸஹாபாக்கள், தாபியீன்கள், அவர்களின் வழித்தோன்றலில் வந்த இமாம்கள். இவர்கள் இஸ்லாத்தை சரியான அடிப்படையில் மக்கள் மன்றத்தில் முன்வைத்து அதற்காக பல இன்னல்களையும் அனுபவித்தார்கள். இவர்கள், ‘லாயிலாஹ’ இல்லல்லாஹ்’ என்ற சத்தியக்கலிமாவையும், அது வேண்டி நிற்கும் பொருளையும் சரிக்குச் சரியாக விளங்கி மக்களை அதன் பக்கம் அழைத்தவர்கள். அதற்காகவே தமது உயிர்களையும் நீத்தவர்கள்,
Read More “அழிந்து போகும் கந்தூரிகளும் உயிர்ப்பிக்கத் துடிக்கும் மௌலவிகளும்” »
ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 4
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு, சுவர்கத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் மாரிகள் பொழியப்படுகின்ற இப்புனித ரமலான் மாதம் நம்மை வந்தடைந்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ். நமது கடந்த கால வாழ்வை சுயபரிசோதனை செய்துகொண்டு சீர்திருந்தி தக்வா-இறையச்சம் உடையவர்களாக நாம் ஆகுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அல்லாஹ் இம்மாதத்தை நமக்களித்திருக்கின்றான்.
ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 1
அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே உரித்தானது.
வரக்கூடிய கண்ணியமிக்க ரமலான் மாதத்திலே வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக நாம் ஒவ்வொருவரும் நம்மால் ஆன பற்பல நற்கருமங்களைச் செய்ய முயற்சிப்போம். அதிலும் பெரும்பாலோனவர்களின் வாழ்வினில் இந்த நான்கு கடமைகளும் சங்கமித்து அவர்கள் இக்கடமைகளை ஒருசேர நிறைவேற்றுவதற்கு அரிய வாய்ப்பாகவும் இம்மாதம் திகழ்கின்றது.