Tag: நோன்பு
நோன்பின் சட்ட திட்டங்கள்-01
நோன்பு கடமையாக்கப்பட்டது ஏன்? – Audio/Video
ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 7
முன்பாவங்கள் பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய இப்புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று அதிகமாக அமல்கள் செய்து அதன் மூலம் நமது பாவங்கள் அனைத்தும் வல்ல இறைவனால் மன்னிக்கப்பபட்டு நோன்பாளிகளுக்கு அவன் வாக்களித்துள்ள ‘ரைய்யான்’ என்னும் சுவர்க்கத்தின் வாயில் வழியாக நாம் சுவர்க்கத்தில் நுழைந்திட அல்லாஹ் அருள்புரிவானாகவும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்ட இப்புனித ரமலான் மாதத்தில் ‘நோன்பாளிகளின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன’ என்ற நபிமொழிக்கேற்ப அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனைகள் செய்து அவனிடம் பாவமன்னிப்பும் நேர்வழியையும் கேட்போம். “ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப் பெறுவது கடமையாகும்” என்ற நபிமொழிக் கேற்ப நமது மார்க்க அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் இந்த ரமலானை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு அல்லாஹ்வின் திருமறையை அதிகமதிகம் பொருளறிந்து படிப்போம்! தப்ஸீர்களை படித்து வசனங்களின் விளக்கங்களைப் பெறுவோம்.
ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 5
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
‘ஒவ்வொரு இரவிலும் சிலரை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கின்ற’ இப்புனித ரமலான் மாதத்தில் ‘நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் கேடயமாக விளங்கும் இந்நோன்புகளை’ முறையாக நோற்பதன் மூலம் ‘மலக்குகளும் நமக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி’ நமது ‘முன்பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு’ ‘ரைய்யான் என்னும் வாசலின் வழியாக சுவர்க்கம் நுழைந்திட’ நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாகவும்.
நாம் இதுவரை ஏகத்துவத்தின் வகைகளைப் பற்றி பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக ‘அல்லாஹ்வின் பெயர்களில் பண்புகளில் இறைவனை ஒருமைப்படுத்துவது என்றால் என்ன? என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.