நிகழ்ச்சி : ரமலான் சிறப்பு சொற்பொழிவு
நாள் : 04-08-2011
இடம் : ரமலான் 2011 சுவனத்து பூஞ்சோலை கூடாரம், பஹாஹீல், குவைத்
நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய வழிகாட்டி மையம், குவைத்
நிகழ்ச்சி : ரமலான் சிறப்பு சொற்பொழிவு
நாள் : 04-08-2011
இடம் : ரமலான் 2011 சுவனத்து பூஞ்சோலை கூடாரம், பஹாஹீல், குவைத்
நிகழ்ச்சி ஏற்பாடு : இஸ்லாமிய வழிகாட்டி மையம், குவைத்
A) இம்மையில் ஏற்படும் பயன்கள்: –
அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கின்றான்!
“அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 2:194 & 9:36)
செல்வம் சேர்த்தல், அழகான பெண்களை அடைவது, குழந்தைச் செல்வங்கள் பெறுவது மற்றும் நிரந்தரமற்ற இந்த உலகத்தின் பிற இன்பங்கள் போன்றவற்றின் மீது அதிக ஆசை வைப்பது இவைகள் தான் பெரும்பாலான சதாரண மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய ஆசைகளாகும். இவைகளை வெறுத்து ஒதுக்குவதை இஸ்லாம் கூற வில்லை. ஆனால் இவைகளை அடைவதே தனது வாழ்வின் இலட்சியம் என