வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரழி) பள்ளி வளாகம், அல்-ஜுபைல்
நாள்: 24.03.2011
வெளியீடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம்
Tag: வழிகேடு
மௌலவிகளும் மரணச்சடங்குகளும்!
மரணம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தும் சோக நிகழ்வாகும். அல்லாஹ்வைத் தவிர உலகிலுள்ள அனைவரும் ஒருநாள் மரணக்கவே செய்வர். மரணமில்லாத வாழ்க்கைக்குச் சொந்தக்காரன் அந்த அல்லாஹ் ஒருவனே. அவனுக்கே புகழ் அனைத்தும் சொந்தமானது. அல்ஹம்து லில்லாஹ்.
ஒரு மரணவீட்டிற்குச் செல்லும் நீங்கள் மௌலவிகள் கதாநாயகர்களாக இருப்பதை நிச்சயம் அவதானிப்பீர்கள்.
பித்அதுல் ஹஸனா!
கடந்த பல இதழ்களில் பித்அத் குறித்து பல்வேறுபட்ட அம்சங்களை நாம் விளங்கி வந்தோம். கடந்த இரு இதழ்களிலும் பித்அத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்துப் பார்த்தோம். பித்அத் கூடாது என்று எவ்வளவுதான் கூறினாலும் “நல்ல பித்அத்தும் இருக்கிறதுதானே” என்ற ஒரு வசனத்தில் அவ்வளவு ஆதாரங்களையும் சில உலமாக்கள் மழுங்கடித்துவிட முயல்கின்றனர்.
பொதுமக்களும் பித்அதுல் ஹஸனா பற்றி அறியாமல் இவர்கள் உளறுகின்றனர் என எண்ணிவிடுகின்றனர். எனவே பித்அதுல் ஹஸனா (நல்ல பித்அத்) குறித்து விரிவாக விளக்குவது அவசியமாகின்றது.